பிரதான செய்திகள்

இலங்கை வரும் அமெரிக்க அதிகாரி!

சமுத்திரங்கள் மற்றும் சர்வதேச சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் விவகாரங்களுக்கான அமெரிக்க பதில் உதவி செயலாளர் ஜெனிபர் ஆர். லிட்டில்ஜோன் இன்று (19) இலங்கை வரவுள்ளார். அவர் இந்தியா மற்றும் மாலத்தீவுக்கும் விஜயம் மேற்கொள்ள உள்ளதாக...

நாட்டின் ஆறு மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் தளம்பல் நிலை காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை 19,20ஆம் திகதிகளில் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆறு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை...

அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் தொடர்பில் உறுதி அளித்த ஜனாதிபதி!

நாட்டிலுள்ள அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை அடுத்த வருடம் 55,000 ரூபாவாக அதிகரிக்க உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். அனுராதபுரம் சல்காது மைதானத்தில் நேற்று முன்தினம் (17) இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக்...

ரணிலின் முதலாவது பொதுக் கூட்டம் ஆரம்பம்!

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் முதலாவது பொதுக்கூட்டம் இன்று (17) பிற்பகல் அனுராதபுரம் சல்தாது விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. நாடளாவிய ரீதியில் நூறு பொதுக்கூட்டங்களை நடத்த ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார். ஐக்கிய தேசியக்...

கடவுச்சீட்டு வழங்குவதில் நெருக்கடி!

கடவுச்சீட்டு(passport) அச்சிடுவதற்கான புத்தகங்கள் தீர்ந்துவிட்டதால், தினசரி வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை 250 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக குடிவரவுத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யாமல் வரும் 30 கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு...

பிறப்பு, இறப்பு மற்றும் திருமணங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

இந்த ஆண்டு முதல் விவாகரத்து வழக்குகள் தொடர்பான தகவல்களை வெளியிடுவதற்கு தேவையான ஆதாரங்களை வழங்குமாறு நீதிபதிகளுக்கு நீதிச்சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது. நீதி அமைச்சினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும்...

தேர்தலில் எவருக்கும் ஆதரவு இல்லை!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவருக்கும் ஆதரவளிக்க தாம் தீர்மானிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். விசேட ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை...

இன்று முதல் ஆரம்பமாகும் தேர்தல் பிரச்சார பேரணி!

எதிர்வரும் செப்ரெம்பர் 21 ஆம் திகதில் இலங்கையில் நடைபெறவுள்ள 9 ஆவது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள ஜனாதிபதி வேட்பாளர்கள் சிலர் இன்று(17) தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கவுள்ளனர். அதன்படி சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்...

நாட்டின் மூன்று மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை!

நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக  மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, காலி மாவட்டத்தின் நெலுவ, எல்பிட்டிய, நாகொட, யக்கலமுல்ல பிரதேசங்களுக்கும், களுத்துறை மாவட்டத்தின் ஹொரணை, மதுகம மற்றும் மாத்தறை...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற கீழ் வளிமண்டலத்தில் தளம்பல் நிலை காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை இன்று தொடர்ந்தும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.. மேல்,...