தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து மேற்கு – வடமேற்குத் திசையை நோக்கி நகரக்கூடும்.
இதன்காரணமாக, அந்த கடற்பரப்புகளில் காற்று, மணித்தியாலத்துக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பகுதிகளில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என மீனவர்கள் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது