போதைப்பொருளுடன் இரண்டு படகுகள் பறிமுதல்!

இலங்கைக் கொடியுடன் இரண்டு படகுகளில் இருந்து 500 கிலோகிராம் கிரிஸ்டல் மெத் என்ற போதைப்பொருளுடன் சிலர் கைது செய்யப்பட்டதாக இந்திய கடற்படையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அரபிக்கடலில் பயணித்த குறித்த இரண்டு படகுகளும் இந்திய மற்றும் இலங்கை கடற்படையினரின் கூட்டு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டன.

சந்தேகநபர்களுடன் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகை மற்றும் இரண்டு படகுகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளன