இலங்கையில் நிதித் துறை ஸ்திரத்தன்மை மற்றும் சீர்திருத்தத் திட்டத்தின் இரண்டாவது உப திட்டத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி கொள்கை அடிப்படையிலான 200 மில்லியன் டொலர் கடனை வழங்கியுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் இயங்கும் வணிகங்களுக்கு தேவையான நிதி வசதிகளை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
இந்த திட்டத்தின் கீழ் முதல் கடனாக, ஆசிய அபிவிருத்தி வங்கி 2023 டிசம்பரில் இலங்கைக்கு 200 மில்லியன் டொலர்களை வழங்கியிருந்தது.
இரண்டாவது உப திட்டம் தொடர்பான 200 மில்லியன் டொலர்கள் திறைசேரிக்கு விடுவிக்கப்படவுள்ளது.
5 வருட சலுகைக் காலத்துடன் கிடைக்கப்பெறும் இந்த கடன் 25 வருட காலத்திற்குள் இந்த திருப்பிச் செலுத்தப்பட வேண்டும் என்பதுடன், ஆண்டுக்கு வட்டி 2% ஆகும்.
இது தொடர்பான ஒப்பந்தத்தில் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் வதிவிடப் பணிப்பாளர் டகாபுமி கடோனோ ஆகியோர் கொழும்பில் கைச்சாத்திட்டனர்.