மஹிந்த ஜனாதிபதியானது எப்படி?

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) கடந்த 2005ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவியேற்றதன் பிண்ணனியில் வன்னி மாவட்ட வேட்பாளர் எமில்காந்தன் பெரும் பங்காற்றியதாக ஒரு தகவல் பேசப்பட்டு வந்தது.

இந்த நிலையில், 2005ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற தேர்தலின் போதான சம்பவங்களில் தனது பங்கு இல்லை எனவும், அக்காலப்பகுதியில் இருந்த இரு முக்கிய பலம் பொருந்திய தரப்புகளாலும் இராஜதந்திர தரப்புகளாலும் எடுக்கப்பட்ட முடிவுகளே அதற்கு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அக்காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பால் பகிஷ்கரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட முன்னர், சுனாமி நிதியத்திற்கு வந்திருந்த பெரும்பாலான நிதியில் பெரும்தொகை தம்மூடாக வழங்கப்பட்ட பின்னரே விடுதலைப்புலிகள் அமைப்பு பகிஷ்கரிப்பை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் கருத்து உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்