சகல செல்வங்களையும் கொடுக்கும் ஜப்பசி வெள்ளி விரதம்!

பாவங்களை போக்கி, புண்ணியங்களை பெருக்கிக் கொள்வதற்கான மாதங்களின் துவக்க மாதமாக ஐப்பசி மாதம்கருதப்படுகிறது.

ஐப்பசி மாதம் என்பது மழைக் காலத்தின் துவக்க மாதமாகும். சூரிய பகவான், துலாம் ராசியில் சஞ்சரிக்கக் கூடிய மாதம் என்பதால் இதனை துலாம் மாதம் என்றும் சொல்லுவதுண்டு.

மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்

தமிழ் மாதங்களில் ஐப்பசி மாதம் என்பது ஐஸ்வர்யங்களையும், கேட்ட வரங்களையும் அள்ளிக் கொடுக்கக் கூடிய மாதமாக அமைகிறது.

மகாலட்சுமியின் அருளை பெறுவதற்குரிய மிக முக்கியமான மாதமாக ஐப்பசி மாதம் கருதப்படுகிறது.

ஐப்பசி மாதத்தில் செய்யக் கூடிய வழிபாடுகளுக்கு பலன்கள் அதிகம்.

பவுர்ணமியில் அன்னாபிஷேகம்
ஐப்பசி மாதத்தில் சிவ பெருமானை வழிபடுவது சிறந்தது.

ஐப்பசி மாத பவுர்ணமியில் சிவ பெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்வது வழக்கம். இந்த மாதத்தில் அன்னாபிஷேகத்திற்கு தேவையான அரிசி, காய்கறிகள் போன்றவற்றை கோவிலுக்கு தானமாக கொடுப்பது நல்லது.

இதனால் வீட்டில் எப்போதும் உணவுப் பஞ்சம் என்பதே ஏற்படாது. ஒரு அன்னாபிஷேகத்தை தரிசித்தால் கோடி லிங்கங்களை தரிசித்து வழிபட்ட புண்ணிய பலன் கிடைக்கும் என்பார்கள்.

அதனால் இந்த மாதத்தில் சிவ வழிபாடு செய்வதும், சிவ கோவில்களுக்கு வேண்டிய உதவிகள் செய்வது, உளவாரப் பணி செய்வது ஆகியவை பல மடங்கு அதிகமான புண்ணியத்தை தரும்.

ஐப்பசி மாதத்தில் வரும் பிரதோஷம் மிகவும் மகத்துவம் நிறைந்ததாகும். இந்த நாளில் விரதம் இருந்து சிவ பெருமாவனை வழிபட்டால் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

பிறவி கடனையும் தீர்க்கும் புண்ணியம் சேரும் மாதம் ஐப்பசி மாதமாகும்.

குறையாத செல்வ சேரும்
ஐப்பசி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் மாலையில் வீட்டில் ஆறு நெய் தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபடுவது சிறந்தது.

இதனால் மகாலட்சுமியின் அருள் எப்போதும் நம்முடைய வீட்டில் நிறைந்திருக்கும். மகாலட்சுமியின் அருட் கடாட்சத்தால் வீட்டில் குறையாத செல்வ சேரும், கடன் பிரச்சனைகள் தீரும்.

அதே போல் ஐப்பசி வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி குபேர பூஜை செய்வதும் சிறப்பானதாகும்.