லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

லெபனானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தாம் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாக அங்குள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

லெபனானில் வசிக்கும் இலங்கையர்கள் தங்கள் பாதுகாப்பு தொடர்பில் பாதுகாப்பற்றதாக உணர்ந்தால், அவர்கள் இலங்கைக்கு செல்வதற்கு இலங்கை தூதரகத்தில் பதிவு செய்ய வேண்டும் என லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், பதிவு செய்யும்போது முன்னுரிமை எப்படி வழங்கப்படும் மற்றும் எந்தெந்த பிரிவுகள் அனுப்பப்படும் என்பது குறித்து விளக்கமளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வான்வழித் தாக்குதல்கள் ஏற்படும் பட்சத்தில், அதுகுறித்த முந்தைய அறிவிப்புகள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்கவும், உடனடியாக அந்தப் பகுதிகளை விட்டு வெளியேறவும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையர் எவருக்கும் எதிர்பாராதவிதமான பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனடியாக லெபனானில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு அறிவிக்குமாறும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.