இயற்க்கை எரிவாயுவின் விலையில் மாற்றம்!

உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் (Natural Gas) விலை இன்றைய தினம் (20) வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இயற்கை எரிவாயுவின் விலை1.25 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையும் இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

அதன் அடிப்படையில் உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 69.22 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.06 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

இதேவேளை கடந்த 12 ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் (18) வரையான காலப்பகுதியில் மசகு எண்ணெய் விலை பெருமளவில் சரிவை சந்தித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவித்திருந்தன.

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் உலகளாவிய எண்ணெய் தேவை வளர்ச்சிக்கான ஒபெக் அமைப்பின் கண்ணோட்டம் மற்றும் சீனாவின் தேவை குறித்த முதலீட்டாளர்களின் கவலைகள் என்பவற்றின் காரணமாக இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.