வீடொன்றில் தீ விபத்து மூவர் பலி!

சிலாபம், சிங்கபுர பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (19) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் தாய், தந்தை மற்றும் அவர்களது குழந்தை உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.