சுமந்திரனால் அரச வேலையை இழந்த நபரின் பரிதாப கதை!

சுமந்திரனால் பலிக்கடாவாக்கப்பட்டு அரச வேலையை இழந்த ஒருவரை பற்றி சமூகவலைத்தள பதிவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்த விடயம் தொடர்பில் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சுமந்திரன் அணியால் பலிக் கடாவாக்கப்பட்ட என் வாழ்க்கை புதிய வேட்பாளர் என்ற பெயரில் தமிழ்த் தேசிய வியாபாரிகள் பலரை வலை வீசி இழுக்கத் திரிகின்றனர்.சென்ற முறை 2020 இல் சுமந்திரன் அணியால் பலிக் கடாவாக்கப்பட்ட வேதநாயகம் தபேந்திரன் நான் தான். கைதடியைச் சேர்ந்த எனது தாய், தந்தை வடமராட்சிப் பரம்பரை.

சுமந்திரனால் பலிக்கடாவாக்கப்பட்டு வேலையை இழந்த ஒருவரின் பரிதாபக் கதை | Man Was Sacrificed Sumandran Lost His Royal Job

கிளிநொச்சி மாவட்ட சமூக சேவைகள் அதிகாரியாக 08 வருடங்கள் பணியாற்றி நிறையச் சேவைகள் செய்தேன். அரச பதவிப் பரீட்சைகளுக்காகப் பல ஆயிரம் புத்தகம் வெளியிட்டேன்.

குறைந்த கட்டணத்தில் சிலசமயம் இலவசமாகப் படிப்பித்துப் பலநூறு பேரை உத்தியோகம் ஆக்கியுள்னேன். மண்ணின் நினைவுகளாகச் சமூக முன்னேற்ற கருத்துகளுள்ள ஆக்கங்களைச் சில ஆயிரம் எழுதியுள்ளேன்.

எழுத்துப் போலவே வாழ்கிறேன் தமக்கு வாக்குச் சேர்க்க வேட்பாளராக நிறுத்தினார்கள். பத்துப் பேரில் பத்தாவதாக வந்தேர். அருமந்த அரச பதவிக்கு முற்கூட்டியே ஓய்வு கொடுத்துப் படாதபாடெல்லாம் படுகிறேன்.

வெட்கம் பார்க்காமல் உழைப்பவன் என்பதால் பிச்சையெடுக்காமல் வாழ்கிறேன். இம்முறை பலர் கேட்டும் போகவில்லை. உறுதியாக மறுத்து விட்டேன். போலித் தமிழ்த் தேசிய வியாபாரிகளது வலையில் சிக்காதீர்கள். இவை எனது வாழ்க்கை அனுபவம் என அவர்  சமூகவலைத்தள பதிவில் சுமந்திரன் பற்றி குறிப்பிட்டுள்ளளார்.