மீண்டும் பாகிஸ்தானுக்கு அனுப்பபட்ட சிறைக்கைதிகள்!

கைதிகள் பரிமாற்றச் சட்டத்தின் கீழ், இந்த நாட்டில் சிறையில் இருந்த 56 பாகிஸ்தான் கைதிகள் பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் கைதிகள் குழுவொன்று பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பாகிஸ்தானுக்குச் சொந்தமான விசேட விமானம் ஒன்றில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஐந்து பெண்களும் 51 ஆண்களும் இன்று (6) அந்நாட்டிற்குச் சென்றுள்ளனர்.

சிறைச்சாலைத் திணைக்கள வரலாற்றில் அதிகளவான கைதிகள் பரிமாற்றம் செய்யப்பட்டமை இதுவே முதல் தடவை என சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர், ஆணையாளர் காமினி பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை மற்றும் பாகிஸ்தான் தூதரகம் ஆகியவற்றின் தலையீட்டுடன் இந்த கைதிகள் பரிமாற்றத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கைதிகளுக்கு வழங்கப்படும் சிறைத்தண்டனை அவர்களின் சொந்த நாட்டில் உள்ள சிறைகளில் வழங்கப்பட உள்ளது.