நவராத்திரி மூன்றாம் நாள் வழிபாட்டு முறை!

நவராத்திரியின் மூன்றாம் நாளில் அம்பிகையை ஞானத்தின் வடிவமாக வழிபட வேண்டும். மூன்றாம் நாளுக்குரிய தேவியே நமக்கு தைரியம், பலம், வெற்றியை தரக் கூடியவள் ஆவாள். இவளை குங்குமத்தாலும், செண்பக பூக்களாலும் அர்ச்சனை செய்து வழிபட்டால் தன, தானியம் பெருகும்.

சிறப்பான வாழ்வு அமையும். இது செல்வத்தை அருளும் மகாலட்சுமியின் வழிபாட்டிற்குரிய துவக்க நாளாகவும் கருதுகிறோம். இச்சை, கிரியை, ஞானம் எங்கு ஒன்று சேருகின்றதோ அங்கு வெற்றி நிச்சயமாக இருக்கும்.

அதனால் காரியங்களில் வெற்றியை வேண்டுபவர்கள் நவராத்திரியின் மூன்றாம் நாளில் வழிபடுவது சிறப்பானதாக இருக்கும்.

அம்மனின் வடிவம் – வாராஹி கோலம் – மலர் வகை கோலம் மலர் – சம்பங்கி இலை – துளசி நைவேத்தியம் – சர்க்கரை பொங்கல் சுண்டல் – காராமணி சுண்டல் பழம் – பலாப்பழம் நிறம் – நீல நிறம் ராகம் – காம்போதி முறையில் வழிபாடு செய்வதன் மூலம் சிறப்பான பலனை பெறலாம்.

வாராஹி அம்மன் வழிபாடு
வாராஹி தேவி, அம்பிகையின் போர் படை தளபதியாக இருந்து அம்பிகைக்கு வெற்றியை தேடித் தந்தவள். பன்றியின் முகமும், பெண்ணின் வடிவமும் கொண்டு விளங்குகின்ற வாராஹி கருணையே வடிவானவள்.

இவளை நவராத்திரியின் மூன்றாம் நாளில் குங்குமம், செண்பக மலர், சம்பங்கி மலர் ஆகியவற்றால் அர்ச்சனை செய்து, கோதுமையால் செய்த உணவுகள், சர்க்கரை பொங்கல் படைத்து வழிபட வேண்டும்.

வாராஹியை வழிபடுவதால் எதிரிகள் தொல்லை, கடன் பிரச்சனை தீரும். எதிரிகளை வீழ்த்தி, தடைகள் விலகி, வெற்றிகள் குவிய இந்த அம்மனை வழிபடுவது சிறப்பு. வாராஹி அம்மன் வழிபாடு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. பலரின் இஷ்ட தெய்வமாகவும் வாராஹி இருந்து வருகிறாள்.

நவதுர்க்கை அம்மன் வழிபாடு
துர்க்கையின் வடிவம் – சந்திரகாந்தா நிறம் – சாம்பல் நைவேத்தியம் – இனிப்பு அல்லது குங்குமப்பூ கலந்த பால் பாயசம் மலர் – தாமரை அல்லது ரோஜா பழங்கள் – உலர் பழங்கள்