சர்வதேச சிறுவர் தினம் இன்று!

சர்வதேச சிறுவர் தினம் மற்றும் முதியோர் தினம் இன்று (அக்டோபர் 1) கொண்டாடப்படுகிறது.

  உலகளாவிய ரீதியில் சிறுவர்களை மகிழ்விக்கும் நோக்கிலும் அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் நோக்குடனும் இந்த தினம் கொண்டாடப்படுகின்றது.

“பிள்ளைகளைப் பாதுகாப்போம்; சமமாக மதிப்போம் என்ற தொனிப்பொருளில் இந்த ஆண்டு சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்படுகிறது.

சிறுவர்களின் உரிமைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

பிள்ளைகளுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவது பெற்றோர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரினதும் கடமையாகும் என அதன் தலைவர்  சரோஜனி குசலா வீரவர்தன தெரிவித்தார்.

இதேவேளை, சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு இன்று (01) தேசிய விலங்கியல் திணைக்களத்தினூடாக விசேட நிகழ்ச்சிகள் பல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இத் தினத்தில் 12 வயதுக்ககு கீழ்ப்பட்ட அனைத்து சிறுவர்களுக்கும் மிருகக்காட்சிசாலையை பார்வையிடுவதற்கு கட்டணம் அறவிடப்பட மாட்டாது என்றும் அன்றைய தினம் மிருகக்காட்சிசாலையை பார்வையிடவரும் அனைத்து சிறுவர்களுக்கும் பரிசுப்பொருட்கள் வழங்கப்படும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.