தேங்காய் எண்ணெய் விலை அதிகரிப்பு!

நாட்டில் சந்தையில் தேங்காய் எண்ணெய்யின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேங்காய் எண்ணெய் வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

இதற்கு முன்னதாக ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய் 610 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில் , தற்போது ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய்யின் விலை 700 முதல் 800 ரூபா வரை அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.