நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்த முறை இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 135,000 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன. அது 0.85 சதவீதமாகும்.

இந்த முறை இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 303,300 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அது 3.3 சதவீத அதிகரிப்பாகும்.

இந்த முறை இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கோடியே 71 இலட்சத்து 40 ஆயிரத்து 554 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.

அவர்களில் ஒரு கோடியே 36 இலட்சத்து 19 ஆயிரத்து 916 பேர் வாக்களித்திருந்தனர்.