நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 18ஆம் திகதி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளது.
நேற்று (10) இடம்பெற்ற அரச மருத்துவ அதிகாரிகள் சங்க கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வியடத்தினை அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாசா (Prabath Sugathadasa) தெரிவித்துள்ளார்.பதுளை (Badulla) பொது வைத்தியசாலையில் சேவையாற்றும் தமது சங்கத்தின் பிரதி செயலாளர் பாலித்த ராஜபக்சவிற்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஒழுக்காற்று நடவடிக்கையை நிறுத்தக் கோரி இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளனர்.இதேவேளை, இன்று (11) முதல் நாடளாவிய ரீதியாகவுள்ள சகல வைத்தியசாலைகளிலும் கறுப்புக் கொடி பறக்கவிடத் தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.