இலங்கை துறைமுகத்திற்கு வரும் கப்பல்கள் அதிகரிப்பு!

2024ஆம் ஆண்டில் குறுகிய மற்றும் நீண்டகால பழுதுபார்ப்பு நடவடிக்கைகளுக்காக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்திற்கு வரும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதன்படி, இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஒகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் 23 கப்பல்கள் பழுதுபார்ப்பு சேவையினை பெற்றுக்கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகமானது பல்வேறு நிபுணத்துவத்துடன் கப்பல் பழுதுபார்க்கும் சேவைகளை வழங்கும் பல நிறுவனங்களைக் கொண்டுள்ளது.நீருக்கடியில் மற்றும் நீரின் மேற்பரப்பில் பழுதுபார்ப்பதற்காக எந்த அளவிலான கப்பலையும் எளிதாக நங்கூரமிடக்கூடிய வசதிகள் காணப்படுவதாகவும்,

குறித்த சேவைத்துறையினை இந்த வருடம் மேலும் விரிவுபடுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தின் கடல்சார் சேவைகள் மற்றும் கப்பல் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி பழுதுபார்ப்பதற்காக வரும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதன் காரணமாக, கப்பல் பழுதுபார்க்கும் சந்தையில் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் முன்னிலை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.