இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில், யார் வெற்றி பெறுவார் என்பது குறித்து நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுள்ளது.
வழமையாக ஜனாதிபதி தேர்தலில் பிரதான இரண்டு கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மத்தியில் கடும் போட்டித்தன்மை காணப்படும்.
எனினும் இம்முறை மும்முனை மோதலாக அது மாறியுள்ளது. ரணில், சஜித், அநுர என்ற மூன்று தரப்பினருக்கும் இடையில் கடும் போட்டி நிலை காணப்படுகிறது.நாமல் ராஜபக்ச தேர்தல் களத்தில் இருந்தாலும், பரீட்சார்த்த போட்டியாக அவர் இதனை கருதுகின்றார். இதில் வெற்றி பெற முடியாது என்பது அவருக்கும் தெரிந்திருந்தாலும் ஒத்திகை போட்டியாக இது மாறியுள்ளது.இம்முறை ஜனாதிபதி முடிவுகள் விருப்பு வாக்கின் அடிப்படையில் கூட தீர்மானிக்கப்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதற்கு தயார் நிலையில் இருக்குமாறும் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையில் பிரதான மூன்று வேட்பாளர்களும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளனர். இதன் பின்னர் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த வாரம் முதல் மாற்றம் ஒன்றை மேற்கொள்ளப் போவதாக பிரச்சாரம் செய்து வரும் ஜனாதிபதி வேட்பாளர் முன்னிலை வகித்து வந்தார். எனினும் அவருக்கான ஆதரவு குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது