வடமத்திய மாகாண முன்னாள் அமைச்சர் பீ.பி.திஸாநாயக்கவின் மருமகள் கைது செய்யப்பட்டுள்ளதாக கலென்பிந்துனுவெவ பொலிஸார் தெரிவித்தனர். கலென்பிந்துனுவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய மருமகளே கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது, சந்தேக நபரான மருமகளின் மகன் கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் உள்ள தனது பாடசாலைக்கு துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் T-56 ரக தோட்டாக்களை கொண்டு சென்றுள்ளார்.இதனையடுத்து, பாடசாலை அதிபரால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபரான மருமகள் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபரான மருமகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தனது மாமனாரான வடமத்திய மாகாண முன்னாள் அமைச்சர் பீ.பி.திஸாநாயக்கவுக்கு சொந்தமான வீட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட பொருட்களில் தோட்டாக்கள் காணப்பட்டதாக தெரியவந்துள்ளது.மேலும் கைதான சந்தேக நபரின் மருமகள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.