தேர்தல் சுவரொட்டிகளை அகற்ற சம்பளம்!

இலங்கையில் வரும் செப்ரெம்பர் 21 ஆம் திகதி 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், தேர்தல் சட்டத்தை மீறி நாடளாவிய ரீதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுவரொட்டிகள், கட்அவுட்கள் மற்றும் பதாகைகளை அகற்ற தொழிலாளிக்கு மாதாந்தம் 47,050 ரூபா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கடமைக்காக பல தொழிலாளர்கள் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பதாகைகளை அகற்றும் பணிகள் 

எனினும் , அந்த சேவைக்கு ஒரு காவல் நிலையத்தில் மூன்று பணியாளர்களை மட்டுமே சேர்த்துக்கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.

அதன்படி, நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள பொலிஸ் நிலையங்களின் தரத்தைப் பொறுத்து மூன்று அல்லது நான்கு பணியாளர்களை வேலைக்கு அமர்த்த முடியும்.அத்துடன் நாடு முழுவதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுவரொட்டிகள், கட்அவுட்கள் மற்றும் பதாகைகளை அகற்றும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் சந்திரகுமார தெரிவித்துள்ளார்.அதேவேளை சில கட்சி அமைப்பாளர்கள் பல இலட்சம் ரூபா செலவழித்து கட்அவுட்களை காட்சிப்படுத்தியுள்ளதாகவும், அவற்றை அகற்றுமாறு சம்பந்தப்பட்ட வேட்பாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.