தென் ஆப்பிரிக்காவில் அழகி பட்டத்தை வென்ற மாற்றுத்திறனாளி பெண்!

தென் ஆப்பிரிக்காவில் இடம்பெற்ற 2024-ம் ஆண்டுக்கான அழகிப்போட்டியில் 28 வயதான மியா லு ரூக்ஸ் என்ற பெண் அழகி என்ற பட்டத்தை வென்றுள்ளார்.

இதில் சுவாரசியம் என்னவென்றால் அழகி பட்டத்தை வென்ற பெண் காது கேளாத மாற்றுத்திறனாளி ஆவார்.

அவருக்கு ஒரு வயது இருந்தபோதே காது கேட்க முடியாமல் போனது. பின்னர் `கொஹ்லியர் இம்பிளான்ட்’ என்ற சிகிச்சையால் தான் ஒலிகளை உணர்கிறார்.

இதன் மூலம் தென் ஆப்பிரிக்க வரலாற்றில் முதன் முறையாக காது கேட்காத மாற்றுத்திறனாளி ஒருவர் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறுகையில்,

எனது கனவு இன்று நிஜமாகி விட்டது. இதேபோல் சமூகத்தில் ஒதுக்கப்பட்ட மற்ற மாற்றுத்திறனாளிகளின் கனவுகளை நனவாக்கவும் தான் விரும்புகிறேன். அவர்களுக்கு ஊக்கம் அளிப்பதற்காகவே தான் இந்த போட்டியில் கலந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.