காங்கேசன்துறை நாகப்பட்டின கப்பல் சேவை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

யாழ். (jaffna) காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையே 2024 ஓகஸ்ட் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளதாக IndSri Ferry Service Pvt லிமிடெட் தெரிவித்துள்ளது.

குறித்த தகவலை நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ். நிரஞ்சன் நந்தகோபன் (Niranjan Nandagopan) உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்படி தமது பயணிகள் கப்பலான ‘சிவகங்கை’ இரண்டு நாடுகளுக்கிடையிலான கப்பல் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்டணம்
அந்தவகையில், இந்தியா (India) நாகப்பட்டினத்தில் இருந்து சிவகங்கை பயணிகள் கப்பலானது வெள்ளோட்டத்திற்காக கடந்த 10 ஆம் திகதி 12 மணியளவில் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது.

இந்த சிவகங்கை கப்பலில் சாதாரண வகுப்பில் 133 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. பயணி ஒருவருக்கு 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது வணிக வகுப்பில் 27 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், பயணிக்க ஒருவருக்கு 7,500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

60 கிலோ வரையான பொதி
அத்துடன், இந்த கப்பலில் பயணிகளுக்கு துரித உணவுகளை கட்டணத்துடன் பெற்றுக்கொள்ள உணவக வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒருவர் தம்முடன் 60 கிலோ வரையான பொதியை எடுத்துச் செல்லவும், 5 கிலோ வரை கைப்பையில் எடுத்துச் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம், சோதனை ஓட்டம் முடிந்த பின்னர் பயணிகள் அனுமதி சீட்டுக்களை முன்பதிவுகளை செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.