இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான 10 மாத கால யுத்தத்தின் மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றாக, காசா நகரில்,தங்குமிடமாக மாற்றப்பட்டிருந்த பாடசாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலின் தாக்குதல் அமைந்துள்ளது.
குறித்த தாக்குதல் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலில 60ற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலிய இராணுவம்
இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலிய இராணுவம், பொறுபேற்றுள்ளது.
எனினும் குறித்த பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த ஹமாஸின் கட்டளையகம் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் நியாயப்படுத்தியுள்ளது.
பாலஸ்தீன சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, போரினால் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட மக்களுக்கு இந்த பாடசாலை தங்குமிடமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, ஜூலை 6 வரை இஸ்ரேலிய தாக்குல்கள் காரணமாக, காசாவில் உள்ள 564 பாடசாலைகளில் 77 பாடசாலைகள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் காசாவின் போருக்கு முன்னர் வசித்து வந்த 2.3 மில்லியன் மக்கள் தொகையில் 1.9 மில்லியனுக்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டு விரட்டப்பட்டுள்ளனர்.