பொதுவாக நாம் தினமும் ஊட்டசத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். அதில் ஒன்று தான் முட்டை. முட்டையில் அளவுக்கு அதிகமான ஊட்டசத்துக்கள் உள்ளன.
இதனால் சிலர் முட்டையை தினமும் எடுத்து கொள்வார்கள். இது இலகுவாக பெற்றும் கொள்ளலாம். இப்படி கிடைக்கும் முட்டையை அவித்து, பொறித்து, வறுத்து சாப்பிடுவார்கள் இன்னும் சிலர் பச்சையாக சமைக்காமலும் குடிப்பார்கள்.
இதனிடையே பூப்படைந்த பெண்கள் முட்டையை பச்சையாக குடிப்பார்கள். இதனை காலம் காலமாக செய்து வருகிறார்கள்.
பருவமடையும் பெண்கள் பச்சையாக முட்டைகளை 16 நாட்கள் வரை குடிக்க வேண்டும் என முன்னோர்கள் கூறுவார்கள். அவர்களை போல் உடற்பயிற்சி செய்பவர்களும் பச்சை முட்டையை குடிப்பார்கள்.
இப்படி பச்சை முட்டையை குடிப்பது நல்லதா? கெட்டதா? என தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
பச்சையாக முட்டை குடிப்பது நல்லதா?
முட்டையை வேக வைக்காமல் பச்சையாக குடிப்பது நல்லது என பலரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆம் இது உண்மை தான்.
சமைத்த முட்டையை விட சமைக்காமல் பச்சையாக எடுத்து கொள்ளும் முட்டையில் அதிகளவிலான புரோட்டின்கள் உள்ளன. இதனால் தான் பூப்படைந்த பெண்கள், இளம்பெண்கள், தடகள வீரர்கள், உடலுக்கு வலு தரும் உடற்பயிற்சி செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள், பளு தூக்குபவர்கள் போன்றவர்கள் பச்சையாக முட்டை குடிக்கிறார்கள்.
சமைத்த முட்டையை உட்கொள்ளும் போது 90% புரோட்டீன் உடலை சேர்கிறது. ஆனால் சமைக்காமல் முட்டையை எடுத்து கொள்ளும் போது 50% மட்டும் தான் உடலுக்கு சேரும் என ஆய்வுகள் கூறுகின்றன.
அதிலும் குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், வயதானவர்கள் பச்சை முட்டை குடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இந்த பழக்கம் வேறுவிதமான நோய்தொற்றுக்களை ஏற்படுத்தலாம்.
முட்டையை 74 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சமைக்கும் பொழுது “ சால்மோனெல்லா” எனப்படும் பாக்ட்ரியா அழிந்து விடும். மாறாக சமைக்காமல் சாப்பிடும் பொழுது அந்த பாக்ட்ரியா அப்படியே வயிற்றுக்குள் செல்ல வாய்ப்பு இருக்கிறது.
எனவே முட்டைகள் வாங்கினால் அதனை சமைத்து சாப்பிடுவதே சிறந்தது. குழந்தைகளுக்கும் சமைத்து கொடுங்கள். அதுவே அவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.