தினமும் சூரிய விதைகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

ஆரோக்கிய நலன்களை அள்ளித்தரும் சூரியகாந்தி விதைகளை தினம் சாப்பிட்டால் நம் உடலில் பல நன்மைகளை பெறலாம். இந்த சூரியகாந்தி விதைகளை தினமும் சாப்பிடுவதால் என்னனென்ன நன்மைகள் கிடைக்கும் என நாம் இங்கு பார்போம்.

சூரியகாந்தி விதையில் வைட்டமின் இ, பி1, பி6, இரும்புச்சத்துக்கள், காப்பர், செலனியம், மாங்கனீஸ், சிங்க் மற்றும் பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் உள்ளன.

சூரியகாந்தி விதைகள் வெள்ளை, கருப்பு நிற ஓட்டுக்குள் இந்த விதைகள் உள்ளது. விதைகள் வெண்நிறமாக உள்ளன. சுவையானதாகவும் உள்ளன. ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்தது. நீங்கள் விதைகளை அப்படியே சாப்பிடலாம். வறுத்தும், வேறு உணவுகளில் சேர்த்தும் சாப்பிடலாம்.

வீக்கத்தை குறைக்கிறது
நாள்பட்ட வீக்கத்தால் அவதிப்படுபவர்களுக்கு, சூரியகாந்தி விதைகளின் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உதவுகின்றன. சூரியகாந்தி விதையில் வைட்டமின் இ, ஃப்ளாவனாய்ட்கள் மற்றும் மற்ற தாவர உட்பொருட்கள உள்ளன. இது வீக்கத்தை குறைக்கிறது. வாரத்தில் ஒருமுறை சூரியகாந்தி விதைகளை சாப்பிடுவது, மற்ற விதைகளை வாரத்தில் 5 முறை சாப்பிடுவதற்கு இணையான ஆற்றலைக் கொடுக்கிறது. இது உடலில் உள்ள நாள்பட்ட வீக்கத்தை குறைக்கிறது. மேலும், நாள்பட்ட நோய்கள் ஏற்படும் ஆபத்துக்களையும் குறைக்கிறது.

இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது
சூரியகாந்தி விதைகளில் ஆரோக்கிய கொழுப்புகள் அதிகம் உள்ளது. இதில் உள்ள பாலிஅன்சாச்சுரேடட் கொழுப்புகள் மற்றும் மேனோஅன்சாச்சுரேடட் கொழுப்புகள் இரண்டும் உள்ளது. முக்கால் கப் சூரியகாந்தி விதையில் 14 கிராம் கொழுப்பு உள்ளது. விதைகள், குறிப்பாக சூரியகாந்தி விதைகள் சாப்பிடுவதால், உங்களுக்கு இதய நோய் ஏற்படும் ஆபத்து, அதிக கொழுப்பு, ரத்த அழுத்தம் என அனைத்தும் குறைகிறது.

நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு வலு சேர்க்கிறது
சூரியகாந்தி விதையில் எண்ணற்ற வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளன. அது உங்கள் உடல் வைரஸ்களை எதிர்த்து போராட உதவுகிறது. இதில் சிங்க் மற்றும் செலனியம் உள்ளது. சிங்க், நோய் எதிர்ப்பு மண்டலத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் நோய் எதிர்ப்பு செல்களை அதிகரித்து பராமரிக்க உதவுகிறது. செலனியமும் வீக்கத்தை குறைக்க, தொற்றை எதிர்த்து போராட மற்றும் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க உதவுகிறது.

உடலின் ஆற்றலை அதிகரிக்கிறது
சூரியகாந்தி விதையில் உள்ள புரதச்சத்துக்கள், உங்கள் உடலின் ஆற்றல் அளவை அதிகரிக்கச் செய்கிறது. வைட்டமின் பி, செலனியம் போன்ற மற்ற ஊட்டச்சத்துக்கள், உங்கள் உடலுக்கு ஆற்றலைக் கொடுக்கிறது. இதில் உள்ள வைட்டமின் பி1(தியாமின்) உங்கள் உணவை ஆற்றலாக மாற்ற உதவுகிறது. அது உங்களை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது. செலனியம் உங்கள் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. உங்கள் உடலுக்கு அதிக ஆக்ஸிஜனைக் கொடுக்கிறது.

சூரியகாந்தி விதையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
சூரியகாந்தி விதையில் உயர் புரதம் மற்றும் ஆரோக்கிய கொழுப்புகள் நிறைந்துள்ளன. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உங்களுக்கு கடுமையான உடல் உபாதைகள் ஏற்படாமல் தடுக்கிறது