மதுபான விலையை குறைக்குமாறு கோரிக்கை!

மதுபான போத்தல் ஒன்றின் விலையை 100 ரூபாவால் குறைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மதுபான உற்பத்தியாளர்களிடம் கலால் ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி இக் கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மதுபான உற்பத்தியாளர்களுடன் கலால் திணைக்களத்தில் நேற்று (02) இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே அவர் இந்த கோரிக்கையினை முன்வைத்ததாகவும் கூறப்படுகின்றது.