குறுகலான சாலைகள் மற்றும் மேம்பாலங்களைக் கண்டுபிடிப்பது அலர்ட் செய்யும் AI அணுகுமுறை முதல் EV சார்ஜிங் நிலையங்களைக் கண்டுபிடிப்பது வரை பல வகைகளில் இந்தியப் பயணிகளுக்கு கைகொடுக்கும் என்றும் கூகுள் நிறுவனம் கருதுகிறது.
கூகுள் மேப்
கூகுள் மேம் இந்தியாவில் புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த அப்டேட்ஸ் இந்தியப் பயணிகள் எதிர்கொள்ளும் சில பொதுவான சவால்களுக்குத் தீர்வாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
குறுகலான சாலைகள் மற்றும் மேம்பாலங்களைக் கண்டுபிடிப்பது அலர்ட் செய்யும் AI அணுகுமுறை முதல் EV சார்ஜிங் நிலையங்களைக் கண்டுபிடிப்பது வரை பல வகைகளில் இந்தியப் பயணிகளுக்கு கைகொடுக்கும் என்றும் கூகுள் நிறுவனம் கருதுகிறது.
புதிய வசதிகள் என்னென்ன?
கூகுள் மேப் சில நேரங்களில் தவறான வழிகளில் நடத்திசெல்வதாக அடிக்கடி குற்றம் சாட்டப்படுகின்றது. அதாவது நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு இருக்கும் குறுகலான பாதையைக் காட்டி சிக்கலில் மாட்டிவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகின்றது. இதனை தீர்ப்பதற்கு கூகுள் AI-ஐப் பயன்படுத்தி நான்கு சக்கர வாகனங்கள் குறுகலான சாலைகளை தவிர்க்க உதவுகிறது. செயற்கைக்கோள் படங்கள், ஸ்ட்ரீட் வியூ மற்றும் பிற தரவுகளைப் பயன்படுத்தி, சாலையின் அகலத்தை மதிப்பிடுகிறது. அதற்குரிய வகையில் ரூட்டிங் அல்காரிதங்களைச் சரிசெய்துள்ளது.
இதே போன்று மேம்பாலங்களில் செல்வதில் இருக்கும் குழப்பத்தினையும் தீர்க்கின்றது. அதாவது 40 இந்திய நகரங்களில் பரிந்துரைக்கப்பட்ட வழித்தடங்களில் மேம்பாலங்களில் பயணிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. இவை பயணத்தின்போது வாகன ஓட்டுநர்களுக்கு வரவிருக்கும் பாலத்துக்குத் தயாராகுமாறு அலர்ட் செய்கிறது.
ONDC மற்றும் நம்ம யாத்ரி மூலம் இயக்கப்படும் புதிய மெட்ரோ டிக்கெட் முன்பதிவு அம்சத்தால் கொச்சி மற்றும் சென்னையில் உள்ள பொது போக்குவரத்து பயனர்கள் பயனடைவார்கள். இந்த ஒருங்கிணைப்பு, கூகுள் மேப்ஸ் மூலம் நேரடியாக மெட்ரோ டிக்கெட்டுகளை வாங்கும் வசதியைக் அளிக்கிறது.
8,000 க்கும் மேற்பட்ட எலெட்ரிக் வாகன சார்ஜிங் மையங்கள் பற்றிய தகவல்கள் கூகுள் மேப்ஸில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதற்காக கூகுள் முன்னணி EV சார்ஜிங் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது. பயனர்கள் இப்போது அந்தந்த இடத்தில் அருகில் உள்ள எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் மையத்தைக் கண்டுபிடிக்கலாம்.
பத்து முக்கிய நகரங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களை விசிட் செய்ய உள்ளூர் நிபுணர்களுடன் இணைந்து கூகுள் பரிந்துரைகளை கொடுக்கிறது. இதன் மூலம் பயனர்களின் பயண அனுபவத்தை மேம்படுத்துகிறது.
சாலை விபத்துகள் பற்றிப் புகார் அளிப்பதற்கும் தகவலைப் பகிர்வதற்கும் எளிதான வசதியை புதிய அப்டேட் வழங்குகிறது. இந்தப் புதிய அம்சம் ஆண்டிராய்டு, ஐ.ஓ.எஸ்., ஆண்டிராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே ஆகியவற்றில் கிடைக்கும். கூகுள் மேப்பில் வந்துள்ள இந்த அம்சங்கள், இந்திய போக்குவரத்தில் பயணிகளுக்கு ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள உதவுகின்றன.