ரணிலை ஆதரிக்கும் MPக்கள்

ராஜபக்ச குடும்பம் மற்றும் ரணில் பற்றிய ரகசிய தகவல் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. 

இந்த தகவல் பற்றி மேலும் தெரியவருகையில்,

கடைசிவரை மொட்டு மட்டுமல்ல , ராஜபக்ச குடும்பமும் ரணிலை ஜனாதிபதி வேட்பாளராக ஆதரிப்பதாவே இருந்தது. ஆனால் நாமல் , தன்னை பிரதமர் ஆக்க வேண்டும் என ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.

அதுதான் ஆணியாக தடையாக இருந்த இடம். பாராளுமன்ற தேர்தலில் வெல்லும் கட்சிக்குத்தான் பிரதமர் பதவி என ரணில் கராராக சொல்லியுள்ளார். அந்த நிலைப்பாட்டிலிருந்து ரணில் மாறவே இல்லை. இதுவே இழுபறியாக இருந்த நிலையில் கடைசியில் நாமலின் அம்மா சிரந்தி , நாமலை பிரதமராக்க முடியுமா? என ரணிலிடம் கேட்டிருக்கிறார்.

ரணில் , வழமையாக சொல்வதையே சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான் அவங்களுக்கு ஆதரவானவர்களை அழைத்து ரணிலை ஆதரிப்பதில்லை என கை தூக்க வைத்துள்ளார்கள்.

19 MPக்கள் இருந்துள்ளார்கள் , அவர்களில் 2-3 பேரை தவிர அனைவரும் ரணிலை ஆதரிக்க வேண்டும் என பேசியுள்ளார்கள்.

அதை செவிசாய்க்க நாமல் தரப்பு இல்லாததால் தனி வேட்பாளரை போட உள்ளதாக சொல்லியுள்ளார் காரியவசம் கூறியதாக சமூக வலைத்தளத்தில் குறித்தி பதிவு வைரலாகி வருகின்றது.