எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தமிழ் பொது வேட்பாளர் வீண் வேலை!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை முன்னிறுத்துவது வீண் செயல் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்(sumanthiran) கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.

வடக்கில் உள்ள தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து பொது வேட்பாளரை கொண்டு வருவதற்கு தயாராக இருப்பதாகவும், அதற்காக தமது தரப்பிலிருந்து எந்த ஆதரவும் கிடைக்காது எனவும் கூறிய அவர், இந்த தீர்மானம் தமிழ் மக்களை மீண்டும் ஏமாற்றும் தீர்மானமாகும் எனவும் குறிப்பிட்டார்.

தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன்
தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன்(vigneswaran) ஆட்சிக்கு வரும் நோக்கில் பொது வேட்பாளரை முன்வைக்க முயல்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

யாருக்கு ஆதரவு வழங்குவது

ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து தமது கட்சி இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும், பிரதான வேட்பாளர்கள் தமது விஞ்ஞாபனங்களை முன்வைத்தவுடன் அது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.