அதிக விலைக்கு பாண் விற்பனை செய்தால் தண்டனை!

இலங்கையில் 450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
இந்நிலையில், குறைக்கப்பட்ட புதிய விலையில் பாணை விற்பனை செய்யாது அதிக விலைக்கு விற்பனை செய்யும் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) தெரிவித்துள்ளது.

அத்துடன் இது தொடர்பாக சோதனைகளை மேற்கொள்ளுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் டி.ஐ. உடுவார புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை, கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை சட்டப்படியான எடை மற்றும் அளவிடும் கருவிகள் மீதான சோதனையின் போது 210 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .