தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) காவல்துறை மா அதிபராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன (Mahinda Yapa Abeywardena) இன்று (26) நாடாளுமன்றத்தில் விசேட விளக்கமளித்தார்.
காவல்துறை மா அதிபரை நியமிப்பதற்கான தீர்மானம் சரியானது, சட்டபூர்வமானது, அரசியலமைப்புக்கு உட்பட்டது மற்றும் நல்லெண்ண அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு என அவர் தெரிவித்துள்ளார்.
சட்ட ஆலோசனை
அத்துடன், தற்போது எழுந்துள்ள பிரச்சினைக்கு ஜனாதிபதியால் கூட தீர்வு காண முடியாது என தெரிவித்த சபாநாயகர், நீதிமன்றத்தின் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமங்கவிற்கு (Ranil Wickremesinghe) கிடைத்துள்ள சட்ட ஆலோசனைகளின் படி, இந்த விடயங்களில் தலையீடு செய்வதிலிருந்து விலகியுள்ளதாக ஜனாதிபதி சபாநாயகரிடம் அறிவித்துள்ளார்.
சட்ட ஏற்பாடுகள்
மேலும், காவல்துறை மா அதிபர் பதவி வெற்றிடமில்லை என்றும் ஜனாதிபதிக்கு சட்ட ஆலோசனை கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால், பதில் காவல்துறை மா அதிபர் ஒருவரை நியமிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் இல்லை என பிரதமர் நாடாளுமன்றில் குறிப்பிட்டுள்ளார்.