டொரன்டோவில் அதிக மழை!

டொரன்டோவில் பல வருடங்களின் பின்னர் மிகவும் அதிக அளவு மழை பொழிந்த ஜூலை மாதமாக இந்த ஆண்டு ஜூலை மாதம் கருதப்படுகின்றது.

கனடிய காலநிலை மாற்றம் மற்றும் சுற்றாடல் நிறுவனம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.

ஜூலை மாத ஆரம்பம் முதல் இதுவரையில் டொரன்டோ நகரில் 186 மில்லி மீட்டர் அளவு மழை பெய்துள்ளது.

இந்த மழை வீழ்ச்சியில் அரைவாசிக்கும் மேற்பட்ட மழை வீழ்ச்சி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பெய்துள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு ஜூலை மாதத்தில் மொத்தமாக 193 மில்லி மீட்டர் அளவு மழை பெய்திருந்தது.

இதுவே டொரன்டோவில் ஜூலை மாதம் பெய்த அதிகளவு மழை வீழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு கிட்டத்தட்ட அந்த அளவிற்கு மழை பெய்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மாதம் பெய்த மழையினால் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டதுடன் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.