வீசப்படும் கழிவுப்பொருள் முகத்தை பளபளப்பாக்குமா?

சருமத்தை பளபளக்க வைக்க காய்கறி தோல்களை தூக்கி எறியாமல் ஃபேஸ் பேக் செய்ய பயன்படுத்தலாம்.

அழகுக் குறிப்புகள்
சருமத்தை அழகாக்க்க கெமிக்கல் பொருட்கள் மற்றும் செயற்கை கிறீம்களை பயன்படுத்துவது மிகவும் ஆபத்தை தரும். இது குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே சருமத்தின் அழகை பராமரிக்க உதவும். ஆனால் இயற்கை பொருட்களை நாம் அழகிற்காக பயன்படுத்தினால் அது சருமத்தின் அழகை நீண்ட ஆயுளுடன் கொண்டு செல்லும்.

இதற்காக தான் காய்கறிகளை வைத்து அதன் தோலை கொண்டு அழசாதனப்பொருட்கள் செய்வதை பார்க்கலாம். வறண்ட சருமம் கொண்டவர்கள் அவகோடா தோல் மற்றும் வாழைப்பழத் தோலைக் கொண்டு ஃபேஸ் பேக்கை உருவாக்கலாம்.

அவகோடோ மற்றும் வாழைப்பழத்தோலில் உள்ள வைட்டமின்கள் மற்றும் இயற்கை எண்ணெய்கள் சருமத்தின் வறட்சியை நீக்குகிறது. இந்த இரண்டையும் அரைத்து தேன் கலந்து முகத்தில் பூசி 20-25 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

அடுத்து சரும வகை உடையவர்கள் கேரட் மற்றும் உருளைக்கிழங்கு தோல்களின் உதவியுடன் ஃபேஸ் பேக்குகளை உருவாக்கலாம். கேரட் தோல்களில் வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளதால் சருமத்தின் நிறத்தை சமநிலைப்படுத்துகின்றன.

மறுபுறம் உருளைக்கிழங்கு தோல்கள் சருமத்தை பளபளப்பாகவும், கரும்புள்ளிகளை குறைக்கவும் உதவுகிறது.இது இரண்டையும் மென்மையாக அரைத்து தயிர் கலந்து பூசி வருவது நல்லது.