யாழ்ப்பாணம் (Jaffna) பருத்தித்துறை (Kayts) பகுதியில் இருந்து கடற்றொழிலுக்காக சென்ற 4 கடற்தொழிலாளர்கள் கரை திரும்பவில்லை என தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், வல்வெட்டித்துறை , முள்ளியான் , கல்முனை மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளை சேர்ந்த 04 கடற்தொழிலாளர்களும் கடந்த 07ஆம் திகதி ஒரு படகில் கடற்றொழிலுக்கு சென்றுள்ளனர்.
பருத்தித்துறை காவல்துறையினர்
இதன்படி, தொழிலுக்கு சென்ற நால்வரும் 05 தினங்களுக்குள் கரை திரும்பி இருக்க வேண்டும், ஆனாலும் அவர்கள் 12 நாட்களாக கரை திரும்பவில்லை என பருத்தித்துறை காவல் நிலையத்தில் கடற்றொழிலாளர்களின் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பருத்தித்துறை காவல்துறையினர் கடற்படையினருக்கும் தகவல் வழங்கியுள்ள நிலையில் கடற்படையினரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.