அர்ச்சுனாவுக்கு வலுக்கும் பெண்களின் ஆதரவு!

யாழ். சாவகச்சேரி ஆதாரவைத்தியசாலையின் முன்னாள் பொறுப்பதிகாரி இராமநாதன் அர்ச்சுனாவுக்கு ஆதரவாக பெருமளவு பெண்கள் சமூகவலைத்தளங்களில் குதித்துள்ளார்கள்.

ரிக்டொக், பேஸ்புக் என்பவற்றில் குறித்த பெண்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.

தமது பேஸ்புக் பக்கத்தில் எந்தவித கருத்துக்களும் தெரிவிக்காது இருந்த ஏராளமான பெண்கள் தற்போது அர்ச்சுனாவுக்கு ஆதரவான கருத்துக்களை வீடியோப் பதிவுகளாக வெளியிடத் தொடங்கிள்ளார்கள்.

அர்ச்சுனாவுக்கு எதிராக பதிவிடும் வைத்தியர்கள் மற்றும் ஏனையவர்களின் பதிவுகளுக்கு துணிச்சலாக எதிர்க்கருத்துக்களையும் வெளியிட்டு வருவதோடு கடும் தொனியில் அவர்களை எச்சரிக்கையும் செய்து வருகின்றார்கள்.