கனடாவில் பால் மற்றும் தாவரங்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் மென்பான வகைகளை உட்கொண்ட இரண்டு பேர் உயிரிழந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடிய சுகாதார முகவர் நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
ஒருவகை பாக்டீரியா தாக்கத்தினால் இவ்வாறு மரணங்கள் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சில்க் மில்க், ஆல்மெண்ட் மில்க், கொகனட், மில்க் ஆல்மண்ட், கொகனட் மில்க், ஆல்மன்ட் மில்க் ஆகிய மென்பான வகைகள் இந்த மாத ஆரம்பத்தில் சந்தையில் இருந்து மீள பெற்றுக் கொள்ளப்பட்டது.
ஆபத்தான பொருட்கள் இந்த பானங்களில் காணப்படுவதாக கூறி குறித்த மென்பான வகைகள் சந்தையில் இருந்து மீள பெற்றுக் கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த மதுபான வகைகளை இந்த மென்பான வகைகளை உட்கொண்ட இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் இந்த மரணங்கள் தொடர்பிலான மேலதிக விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இதேவேளை, இந்த பன வகைகளை அருந்திய 12 பேருக்கு லிஸ்ட்ரியோஸ் என்ற நோய் தொற்று தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆய்வுக்கூட பரிசோதனைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக கனடிய பொது சுகாதாரம் முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒன்றாரியோ, கியுபெக், நோவா ஸ்கொசியா போன்ற பகுதிகளில் இந்த நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் முதல் இந்த ஆண்டு ஜூலை மாதம் வரையில் குறித்த பான வகைகளை அருந்திய மக்கள் நோய்வாய் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.