உயிரைக் காக்கும் கோப்பி சீனாவின் புதியதோர் கண்டுபிடிப்பு!

ஒரு நாளைக்கு 6 மணி நேரத்துக்கு மேல் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள் தினமும் ஒரு கோப்பை கோப்பி அருந்துவதன் மூலம் உயிர் ஆபத்தை குறைக்கலாம் என்று சீன பாடசாலை ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

நபர் ஒருவர் ஒரு நாளைக்கு ஆறு மணி நேரத்திற்கும் மேலாக ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதன் ஊடாக நீண்ட கால தொற்றா நோய்களால் பாதிக்கப்படுவதற்கான அதிக சாத்தியம் காணப்படுகின்ற நிலையில்,

கோப்பி குடிப்பதால் உடலில் ஏற்படும் உயிர்வேதியியல் எதிர்வினைகள் தொடர்பான பிரச்சனைகளின் ஆபத்தை குறைக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

10,000க்கும் மேற்பட்ட அமெரிக்கர்களிடம் 13 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது