கல்வித்துறையில் ஏற்ப்பட்வுள்ள மாற்றம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம், கல்வித்துறையில் மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

பணம் அறவிடுவது சட்டவிரோதமானது..

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கல்வித்துறையில் மேற்கொள்ளப்படும் இந்த மறுசீரமைப்புப் பணிகளுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதியின் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், பாடசாலைகளில் பணம் அறவிடுவது சட்டவிரோதமானது எனவும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு பணம் அறவிடுவதைத் தடுக்க பெற்றோரும் ஒத்துழைக்க வேண்டும்.

ஆசிரியர் சேவை என்பது இந்நாட்டின் எதிர்கால சந்ததியை உருவாக்கும் துறையாகும். மற்றவர்களை விட அவர்களுக்கு அதிக பொறுப்பு உள்ளது. எனவே, தங்கள் மனசாட்சிப்படி செயல்பட வேண்டும்.

பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடும்..

ஆனால், இந்தப் பணிப்பகிஷ்கரிப்புகள் தொடர்ந்தால் தொழிற்சங்கங்கள் பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என்பதை அவர்கள் தற்போது உணர்ந்துள்ளனர்.

எனவே, அவர்கள் வெவ்வேறு கதைகளைக் கூறினாலும், அவர்கள் எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் தற்போது தோல்வியடைந்துள்ளன.

மேலும், மலையகத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பாகவும் தற்போது பிரச்சினை எழுந்துள்ளது. நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, முதலாளிமார் சம்மேளனம் நீதிமன்றம் சென்றுள்ளது.

இதற்கு முன்னர் சம்பளம் அதிகரிக்கப்பட்டபோதும் இதேபோல் அவர்கள் நீதிமன்றத்துக்குச் சென்றாலும் கூட அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

அதேபோன்று இம்முறையும் அவ்வாறே இந்த சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு நீதிமன்றம் தீர்ப்பை வழங்கும் என்பதில் தொழிற்சங்கங்களாகிய எமக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.