யாழில் திடீர் சுற்றிவளைப்பில் 17 நபர்கள் கைது!

யாழ். (Jaffna) நெல்லியடி பகுதியில் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 17 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

குறித்த கைது நடவடிக்கையானது, இன்று (12.07.2024) அதிகாலை நெல்லியடி – துன்னாலை பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரச புலனாய்வாளர்கள்
அரச புலனாய்வாளர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், இராணுவம் காவல்துறையினர் மோப்ப நாய்களின் உதவியுடன் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, நீதிமன்றால் உத்தரவிடப்பட்ட திறந்த பிடியாணைகள், பிடியாணைகள், சட்டவிரோத மதுபானமான விற்பனையாளர்கள் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் என 17 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்டவர்கள் இன்றைய தினம் பருத்திதுறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட உள்ளனர்.

யுவதியைக் கடத்திய மூவர் கைது
இதேவேளை, யாழ். ஊர்காவற்துறைப் பகுதியில் யுவதியொருவரைக் கடத்திய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்களைப் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஊர்காவற்துறை பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றிற்கு அருகில் வைத்து குறித்த யுவதியை வாகனமொன்றில் இளைஞர்கள் கடத்திச் சென்று ஊர்காவற்துறையின் பிறிதொரு பகுதியில் யுவதியை இறக்கி விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.