‘கிளப் வசந்த்’ என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணையில் மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது.
பச்சை குத்தும் நிலையத்தை ஆரம்பிப்பதற்காக, அதன் உரிமையாளர், டுபாயின் ஒரு வங்கி கணக்கிலிருந்து 1 மில்லியன் ரூபாயை பாதாள உலக நபர்களிடம் பணம் பெற்றுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதனை அடுத்தே, அவர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களை எதிர்வரும் ஜுலை 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னெடுக்கப்பட்ட விசாரணை
பச்சை குத்தும் நிலையத்தை ஆரம்பிப்பதற்காக, அதன் உரிமையாளர், டுபாயின் ஒரு வங்கி கணக்கிலிருந்து 1 மில்லியன் ரூபாயை பாதாள உலக நபர்களிடம் பணம் பெற்றுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதை அடுத்தே, அவர் உட்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக,‘கிளப் வசந்த’ என அழைக்கப்படும் வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா, அதுருகிரியவில் கடந்த திங்கட்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்களில் பிரபல பாடகி கே.சுஜீவாவும் ஒருவராவார்.
வசந்த பெரேரா மற்றும் கே.சுஜீவா ஆகியோர் பச்சை குத்திக் கொள்ளும் நிலைய திறப்பு விழாவில் பங்கேற்ற போதே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.