உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகிய செய்தி!

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் (Department of Examinations) தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சையின் இரண்டாம் சுற்று விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் சுற்று விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் விரைவில் நிறைவடைய உள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மதிப்பீட்டு செயல்முறை
ஏறக்குறைய 80 சதவீதமான ஆரம்ப மதிப்பீட்டு செயல்முறை ஏற்கனவே முடிந்துவிட்டது என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மதிப்பீட்டுச் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள அனைத்து கல்வியாளர்கள் மற்றும் ஊழியர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பிற்காக பரீட்சைகள் திணைக்களம் நன்றி தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளின் ஆசிரியர்களும் அதிபர்களும் கடந்த (26) மற்றும் (27) ஆம் திகதிகளில் நடத்திய சுகயீன விடுமுறை போராட்டம் காரணமான பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் இருந்து விலகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுற்றறிக்கை

இதேவேளை,2025 ஆம் ஆண்டிற்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தச் சுற்றறிக்கை கல்வி அமைச்சினால் (Ministry of Education) நேற்று (28.6.2024) வெளியிடப்பட்டுள்ளது.