கண்டி ஹீரஸ்ஸகல பகுதியில் கிராம சேவை உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிராம சேவை உத்தியோகத்தர் ஒருவர் காணி பிரச்சினையை தீர்ப்பதற்காக பெண் ஒருவரிடம் 25,000 ரூபா கோரியதாக பெண் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதன்படி, குறித்த பெண்ணிடம் இலஞ்சம் கோரும் போதே சந்தேகநபர் நேற்று (25) இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட கிராம சேவை உத்தியோகத்தரை எதிர்வரும் ஜுலை 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கண்டி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.