ஜப்பானில் பரவிவரும் அரியவகை பாக்டீரியா தொற்று குறித்து இலங்கையர்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் தலைவர் டொக்டர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.
பாக்டீரியா தொற்று பரவல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
“இது பொதுமக்களிடையே உள்ள பாக்டீரியா பரவல் நிலை. அரிதாக, இது ஒரு சிக்கலாக அபாயகரமான நிலையை ஏற்படுத்தலாம். ஜப்பான் அண்மையில் பாக்டீரியா பரவல் அதிகரிப்பதைக் கவனித்ததாகத் தெரிவித்துள்ளது.
நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் மூலம் இதை மாற்றவும் முடியும். ஆனால் அரிதாக, நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை எதிர்க்கும் பாக்டீரியாக்களும் உள்ளன.
எனினும், நம் நாட்டில் பாக்டீரியா பரவிவிடுமோ அல்லது பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற தேவையற்ற அச்சத்தை யாரும் கொள்ள தேவையில்லை” எனவும் டொக்டர் சமித்த கினிகே மேலும் தெரிவித்துள்ளார்.