பொதுவாக தங்கள் மனதுக்கு பிடித்தவர்கள் தங்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் தங்கள் சொல்வதை கேட்க வேண்டும் எனவும் தான் அனைவரும் நினைப்பார்கள்.
ஆனால் வாழ்வில் அவ்வாறான ஒரு துணை கிடைப்பது தான் மிகவும் கடினமான விடயம். மனதுக்கு பிடித்தவரை உங்களுக்கு ஏற்றவாறு மாற்றுவது சுலபமான விடயம் கிடையாது. ஆனால் அது ஒரு போதும் அதிகாரத்தால் சாத்திமற்றது என்பதை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும்.
காதல் செய்வதற்கு எந்தவிதமான எதிர்ப்பார்ப்பும் அற்ற தூய்மையான அன்பு முக்கியம். நீங்கள் உண்மையான அன்பு வைத்திப்பதால் உங்கள் துணை என்ன செய்தாலும் பொருத்துக்கொள்ள வேண்டும் என்று அர்த்தம் கிடையாது.
அந்த வகையில் காதல் விடயத்தில் ஒருபோதும் சகித்துககொள்ளவே கூடாத விடயங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
காதலில் சகித்துக்கொள்ள கூடாத விடயங்கள்
தங்களின் விருப்பத்துக்குரியவர்க்ள் சண்டை போடுவதை கூட சகித்து கொண்டு வாழலாம். ஆனால் அவர்கள் ஏமாற்றுவதை உண்மையான அன்பு கொண்ட உள்ளத்தால் ஒருபோதும் தாங்கிக்கொள்ள முடியாது. அதனை சகித்தக் கொண்டு இந்த உறவை ஒருபோதும் தொடரவே கூடாது.
ஆரோக்கியமான காதல் உறவில் நம்பிக்கை, விட்டுக்கொடுத்தல் மற்றும் உணர்வுகளுக்கு மதிப்பளித்தல் போன்ற விடயங்கள் இன்றியமையாதது. உறவில் தொடர்ந்து மகிழ்ச்சியின்றி கருத்து வேறுபாடுகளும் முறன்பாடுகளும் நிகழ்ந்தால் அந்த உறவை தொடர்வதில் அர்தம் இல்லை.
காதல் உறவில் தொடர்ந்து சந்தம் போட்டு ஒருவர் இன்னொருவரை அடக்குவது மற்றும் உணர்ச்சி ரீதியாக துஷ்பிரயோகம் செய்வது போன்ற விடயங்கள் இருந்தால் அதனை ஒருபோதும் சகித்துக்கொண்டு உறவை தொடர கூடாது .இது இருவரின் வாழ்க்கையையும் பாதிக்கும்.
எந்த உறவாக இருந்தாலும் மரியாதை மிகவும் முக்கியம். காதல் உறவில் அதிக அவமரியாதை மற்றும் உணர்ச்சி ரீதியான வன்முறையை தாங்கிக்கொண்டு உறவை தொடர கூடாது.
காதல் உறவில் நேர்மை மிகவும் முக்கியம். துணை உங்களிடம் பொய் சொன்னாலோ அல்லது உங்களை ஏமாற்றுகின்றார் என்று நீங்கள் புரிந்து கொண்ட பின்னரோ காதலுக்காக இந்த உறவை தொடராதீர்கள். இதில் எந்த பயனும் இல்லை.
காதல் உறவை குடும்பத்தினரக்கோ அல்லது நண்பர்களுக்கோ எப்போதும் தெரியப்படுத்த கூடாது என நினைக்கும் துணையுடன் நீங்கள் காதல் உறவில் இருந்தால்… எதிர்காலத்தில் ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். இவ்வாறான விடயங்களை சகித்துக்கொண்டு உறவை தொடர கூடாது.
உங்கள் துணை உங்களுடன் நேரத்தை செலவிட விரும்பவில்லை என்றால் அவருக்கு உங்கள் மீது ஈடுபாடு இல்லை என்பதே அர்த்தம். இதனை சகித்துக்கொண்டு உறவை தொடர்வதில் எந்த அர்த்தமும் இல்லை. இவ்வாறான விடயங்களை காதல் உறவில் நிச்சயம் சகித்துக்கொள்ள கூடாது.