லாத்வியா நாட்டின் எல்லைகளுக்குள் சட்டவிரோதமான முறையில் மக்களை ஏற்றிச் சென்ற ஐந்து இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லாத்வியா குடியுரிமை பெற்ற இலங்கையர் ஒருவரினால் செலுத்திய வோக்ஸ்வேகன் போலோ (Peugeot) 307 ரக வாகனத்தையே எல்லைப் பாதுகாப்புப் படையினர் சோதனையிட்டுள்ளனர்.
இதன் போது விசா அல்லது வதிவிட அனுமதிப்பத்திரம் இல்லாத ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஐந்து பேர் இலங்கையர்கள் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இலங்கை பிரஜைகள்
மேலும், Augšdaugava நகர சபையின் எல்லைப்படை காவலர்கள், வோக்ஸ்வேகன் போலோவில் பயணித்த மேலும் மூவர் சட்டவிரோதமாக எல்லையை கடக்கும் நபர்களுக்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
அதற்கமைய, தெரிந்தே ஒருவருக்கு சட்டவிரோதமான முறையில் லாத்வியா குடியேற சந்தர்ப்பம் வழங்கியமைக்காக இந்த இலங்கை பிரஜைகளுக்கு எதிராக குற்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்குரிய தண்டனையில் 2 முதல் 8 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.