கண்டி – பன்வில பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 21 வயதான பெண்ணொருவர் உயிரிழந்திருப்பதாக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து சம்பவத்தில் பன்வில, தவலந்தன்ன – ஆகலை தோட்டத்தைச் சேர்ந்த 21 வயதான நிலு என்றழைக்கப்படும் செல்வராஜ் சபியா என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் கடந்த சனிக்கிழமை (04-05-2024) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தெல்தெனிய ஆடைத் தொழிற்சாலையில் பணியை முடித்து விட்டு முச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக்கொண்டிருக்கும்போது, முச்சக்கர வண்டி வீதியை விட்டு சுமார் 35 அடி பள்ளத்தில் வீழ்ந்ததில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
மேலும், முச்சக்கர வண்டியில் பயணித்த இரு பெண்கள் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மடுல்கலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
குறித்த சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதியும் காயமடைந்த நிலையில் தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக தெல்தெனிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.