பதுளை(Badulla) – கரந்தகொல்ல பகுதியில் நிலவும் மண்சரிவு அபாயம் உமா ஓயா திட்டத்தினால் ஏற்படவில்லை என ஆரம்பகட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
இந்த விடயத்தை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் மண்சரிவு பிரிவின் பணிப்பாளர் கலாநிதி காமினி ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு அபாயம்
எல்ல – கரந்தகொல்ல மற்றும் மலித்தகொல்ல பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கை கடந்த ஏப்ரல் 26ஆம் திகதி விடுக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த மண்சரிவுக்கும் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்துக்கு தொடர்பு உள்ளதாக கரந்தகொல்ல பிரதேச மக்கள் குற்றம் சுமத்திவந்தனர்.
இதனையடுத்து, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் ஆய்வுகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.