நான்கு வயது பூர்த்தியான ஒவ்வொரு பிள்ளையும் அடுத்த வருடம் முதல் முன்பள்ளிக் கல்வியை பெறுவது கட்டாயமாக்கப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.
கொழும்பு, டட்லி சேனாநாயக்க வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்தே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
முன்பள்ளிச் சிறுவர்களுக்கு வகுப்பறைகள்
அத்துடன், இடவசதி உள்ள மற்றும் மூடப்பட்டிருக்கும் அனைத்து பாடசாலைகளிலும் முன்பள்ளிச் சிறுவர்களுக்கு வகுப்பறைகள் ஒதுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.