அனைத்துலக தமிழ்க்கலை நிறுவகம் முன்னெடுப்பில் ஆறு நாட்கள் நடந்த போட்டியில் 04 இசைப்பள்ளியிலிருந்து ஒன்பது பேர் பங்குபற்றியுள்ளனர்.
இதியில் ரம்யா சின்ன வயதிலிருந்து மாவீரர்களது தியாகங்களையும் தலைவனின் வீரத்தையும் உணர்வாக பாடி உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் மனங்களில் தனக்கான தனித்துவ இடத்தை பிடித்துள்ளார்.
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழீழ எழுச்சி பாடல் போட்டியில் அத்தனை போட்டியாளர்களோடும் சிறப்பாக மோதி பாடி முடிந்ததும் சபையின் ஏகோபித்த முடிவானது ரம்யாதான் எழுச்சிக்குயிலாவாள் என்று அது போலவே இசைக்குயில் போட்டியிலும் தெளிவானது.
அது ரம்யாவுக்கே உரித்தான தனித்திறன் என்றும் பார்வையார்கள் உட்பட அனைவரும் கூறியுள்ளனர்.
ரம்யாவின் இந்த மகத்தான வெற்றிக்கு மன நிறைவான வாழ்த்துகள் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.