உலகின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிறுவனமான சீனாவின் சினோபெக் ஜூன் மாதத்திற்குள் இலங்கையில் ஒரு சுத்திகரிப்பு நிலையத்தை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளது.
இந்தநிலையில் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாட்டில் மிகப்பெரிய முதலீடாக குறித்த திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதாக இலங்கையின் மின்துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
பொருளாதார வளர்ச்சி
2022 இல் ஏற்பட்ட கடுமையான டொலர் பற்றாக்குறையினால் ஏற்பட்ட நிதி நெருக்கடியைத் தொடர்ந்து, அதன் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி வளர்ச்சிக்கு திரும்புவதற்கான போரில், முதலீட்டை ஈர்ப்பதற்கு இலங்கை எதிர்பார்த்துள்ளது.
இந்தநிலையில் சினோபெக் ஓவர்சீஸ் இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங்கின் அதிகாரிகள், இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கொழும்பு வந்துள்ளனர்.
அவர்கள் கூற்றுப்படி, சினோபெக் நிர்வாகம் சுத்திகரிப்பு நிலையத்தின் திறனை அசல் திட்டத்திலிருந்து இரட்டிப்பாக்க முடிவு செய்துள்ளதாக இலங்கையின் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி அவர்கள் திட்டத்திற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு 2024 ஜூன் மாதத்துக்குள் பணிகளை ஆரம்பிக்கவுள்ளனர்.
முன்னதாக இந்த 4.5 பில்லியன் டொலர்கள் பெறுமதிக்கொண்ட இந்த முதலீட்டு திட்டத்திற்கு கடந்த நவம்பர் மாதம் இலங்கையின் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.